அரசு பஸ் கவிழ்ந்து விபத்து மூதாட்டி சாவு

மடிகேரி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து மூதாட்டி உயிரிழந்தார்.

Update: 2023-03-03 06:45 GMT

குடகு-

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா நாபொக்கலு அடுத்த கோட்டேரி பள்ளி வீதி நேற்று முன்தினம் காலை அரசு பஸ் ஒன்று கட்டுபாட்டை இழந்து தரிகெட்டு ஓடியது. இதை பார்த்த டிரைவர் பஸ்சை கட்டுப்படுத்த முயற்சித்தனர். ஆனால் நிற்காமல் சென்ற பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த, கக்கப்பே கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 65) என்பவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு மடிகேரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மடிகேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மடிகேரி போலீசார் வழக்கு பதிவு ெசய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்