சிவசேனாவின் நாடாளுமன்ற அலுவலகம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கீடு

சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

Update: 2023-02-21 10:47 GMT

மும்பை,

சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே மேல் முறையீடு செய்துள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவை உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததையடுத்து, ஷிண்டே அணியினருக்கு சிவசேனாவின் நாடாளுமன்ற அலுவலகத்தை மக்களவைச் செயலகம் ஒதுக்கியுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே அணியின் தலைவர் ராகுல் ஷெவாலே எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த மக்களவை செயலகம், நாடாளுமன்றக் கட்டிடத்தில் சிவசேனா அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்ட அறை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்