கல்வி மந்திரி ஒரு "மதுபானத்துறை மந்திரி" - மணீஷ் சிசோடியாவை கடுமையாக சாடிய பாஜக தலைவர்

டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை அம்மாநில பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா கடுமையாக சாடியுள்ளார்.

Update: 2022-08-21 11:26 GMT

Image Courtacy: ANI

புதுடெல்லி,

டெல்லியில் மதுபானக் கடைகள் ஒதுக்கியதில் முறைகேடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து சிபிஐ டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா மற்றும் இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் 14 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டது.

இந்த சூழலில் மணீஷ் சிசோடியா வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் மற்ற 13 பேருக்கும் சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் அளித்துள்ளதாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து தன் மீதான சிபிஐயின் லுக் அவுட் நோட்டீசுக்கு, பிரதமர் மோடியை டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை அம்மாநில பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், "சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக கல்வி மந்திரி ஒரு மதுபானத்துறை மந்திரியாகி இருக்கிறார். சிசோடியா ஜி, கிரிமினல் வழக்குகள் மற்றும் ஊழலில் ஈடுபடும் நபர் நாட்டை விட்டு ஓடிவிடக்கூடாது என்பதற்காக தான் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. மதுபான மாபியாக்களுக்கு பல கோடி ரூபாய் லாபம் கொடுத்தது ஏன் என்பதற்கு கெஜ்ரிவால் அரசு பதில் சொல்ல வேண்டும்" என்று அவர் கூறினார்.

மேலும் மணீஷ் சிசோடியா மற்றும் கலால் கொள்கையை விமர்சித்த அவர், டெல்லி துணை முதல்-மந்திரியை சுட்டிக்காட்டி, "நீங்கள் செய்த ஊழலுக்கான வாழ்த்து அட்டை அல்ல, லுக் அவுட் நோட்டீஸ்தான் உங்களுக்கு வழங்கப்படும்" என்று கூறினார். தொடர்ந்து டெல்லி அரசின் கலால் கொள்கையை 'ஊழல் மற்றும் கொடுங்கோல் கொள்கை' என்று குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்