ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

ராஜஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2022-08-22 00:41 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் இன்று அதிகாலை 2.01 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பிகானேரில் இருந்து வடகிழக்கே 236 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது புவிமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை.

இதற்கு முன்னதாக உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் நேற்றுமுன்தினம் ரிக்டர் 5.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்