அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.4 ஆக பதிவு
அந்தமான் கடலில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது
அந்தமான்,
அந்தமான் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 03:39 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது அந்தமான் கடலில் 4.4 ரிக்டர் அளவில் 93 கிமீ ஆழத்தில்.ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. மேலும் நிலநடுக்கம் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.