குஜராத் கடற்பகுதியில் அாிசி பையில் கிடந்த கஞ்சா பறிமுதல்

அந்த பையில் ‘கோப்ரா பிராண்ட் கோஹினூர் பாசுமதி ரைஸ்’ என எழுதி இருந்தது.

Update: 2022-06-12 14:03 GMT

அகமதாபாத்,

குஜராத்தில் உள்ள கட்ச் கடற்பகுதிக்கு அருகில் உள்ள க்ரீக் என்ற இடத்தில் இருந்து 10 கஞ்சா பொட்டலங்களை எல்லை பாதுகாப்பு படையினா் பறிமுதல் செய்துள்ளனா். அங்குள்ள வரயா தார் தீவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்குாிய வகையில் பொட்டலங்கள் கிடந்துள்ளது.

அந்த பொட்டலங்களில் 'கோப்ரா பிராண்ட் கோஹினூர் பாசுமதி ரைஸ்' என எழுதி இருந்தது. அதனை பாிசோதித்த பாதுகாப்பு படையினா் அதில் கஞ்சா இருந்ததை கண்டிபிடித்தனா்.

கட்ச் கடற்பகுதி பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. எனவே இந்த பொட்டலங்கள் பாகிஸ்தானில் இருந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என சந்தேகம் தொிவித்து உள்ளனா்.கடந்த 2020- ம் ஆண்டு முதல் இதுவரை சுமாா் 1516 க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்களை அந்த பகுதிகளில் இருந்து பாதுகாப்பு படையினா் மீட்டு உள்ளனா்.

Tags:    

மேலும் செய்திகள்