தொடர்ந்து 2-வது நாளாக 200-க்கு கீழே வந்தது, கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update:2023-01-09 11:22 IST

புதுடெல்லி,

நமது நாட்–டில் கடந்த 2 நாட்–க–ளாக தின–சரி கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்டி பதி–வாகி வந்–தது. இந்தநிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 163 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2371 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,721 பேர் ஆக உள்ளது.

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,47,002 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,20,14,06,483 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 10,336 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்