கேரளாவில் 2021 ஆம் ஆண்டு ராகுல்காந்தி பயணம் செய்த ஆட்டோவின் டிரைவர் நேற்று நடந்த விபத்தில் மரணம்
கேரளாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தின் சிசிவிடி காட்சி வெளியாகியுள்ளது.
வயநாடு,
கேரளாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தின் சிசிவிடி காட்சி வெளியாகியுள்ளது. வயநாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த ஆட்டோ பக்கவாட்டில் உள்ள கார் மோதி உரசிய தருணத்தில் எதிரே வந்த அரசு பேருந்து ஆட்டோ மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோ ஓட்டுநர் ஷெரீப் மற்றும் ஆட்டோவில் சென்ற அம்மினி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் இறந்த ஓட்டுநர் ஹெரீபின் ஆட்டோவில் பயணம் செய்துள்ளதால் அவரது மறைவுக்கு முகநூல் பதிவு மூலம், காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.