உள்நாட்டுச் சந்தை பாதிக்கும் வகையில் சரக்கு இருப்பு வைத்திருக்க வேண்டாம் - பருப்பு இறக்குமதியாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

விநியோக சங்கிலியில் உள்ள சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கலந்தாலோசனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.;

Update:2023-03-30 15:43 IST

புதுடெல்லி,

துவரை உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யவும், உள்நாட்டுச் சந்தையில் விலை குறைவாகவும் போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும் இருப்புகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இதன்படி பருப்பு இறக்குமதியாளர்களுக்கு தங்களது கையிருப்பில் உள்ள பருப்பின் அளவு குறித்து வழக்கமான அடிப்படையில் வெளிப்படையான முறையில் அவ்வபோது தெரிவிக்குமாறும் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

உள்நாட்டுச் சந்தையில் பருப்பின் இருப்பில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்த விதமான சரக்கையும் இருப்பு வைத்திருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருப்பு வகைகள் நுகர்வோருக்கு போதிய அளவில் கிடைக்கவும், விலை குறைவாக இருப்பதை உறுதி செய்யவும் விநியோக சங்கிலியில் உள்ள சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கலந்தாலோசனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்