மனைவி, குழந்தைகளுடன் மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

பணப் பிரச்சினை காரணமாக மருத்துவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.;

Update:2024-04-30 20:07 IST

அமராவதி,

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ்(40). எழும்பியல் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவரது வீட்டிற்கு வழக்கம்போல பணிப்பெண் வேலைக்கு சென்றபோது மருத்துவர் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், மருத்துவரின் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது மருத்துவர் வீட்டின் பால்கனியில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் உள்ளே இறந்து கிடந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீநிவாஸ், மருத்துவமனை ஒன்றை நிறுவியதாகவும், பின்னர் நிதி நெருக்கடி காரணமாக அதை விற்றதாகவும் தெரியவந்தது.

பணப் பிரச்சினை காரணமாக மருத்துவர் ஸ்ரீநிவாஸ், தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு, பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

Tags:    

மேலும் செய்திகள்