கர்நாடக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்; அதிகாரிகளுக்கு பசவராஜ் பொம்மை எச்சரிக்கை

கர்நாடக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-07-28 16:29 GMT

பெங்களூரு:

ஆலோசனை கூட்டம்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று தனது ஆட்சி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து தலைமை செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், கமிஷனர்களுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்.

இதில் உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

நற்பெயருக்கு களங்கம்

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றன. இதனால் அரசுக்கு இக்கட்டான நிலை ஏற்படுகிறது. அடிக்கடி கொலைகள் நடக்கின்றன. போலீசார் மெத்தனமாக செயல்படக்கூடாது. இதே நிலை தொடர்ந்தால் அரசு இதை வேடிக்கை பார்க்காது. சரியாக பணியாற்ற முடியாவிட்டால் போய்விடுங்கள். அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்.

உளவுத்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள். கடலோர பகுதி சற்று பதற்றமான பகுதி என்று தெரியாதா?. அங்கு கூடுதலாக கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டாமா?. பிரவீன் நெட்டார் கொலை நடந்துள்ளது. போலீசார் சரியான முறையில் செயல்படாததால் அரசின் ஓராண்டு சாதனை விளக்க மாநாடு ரத்து செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை காட்டமாக பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்