தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளிக்கும் தகவல்களை புறக்கணிக்காதீர் - மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் அளிக்கும் தகவல்களை புறக்கணிக்க வேண்டாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சரவையின் அனைத்து துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர்.
5 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, பொருளாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.
இந்த கூட்டத்தின் போது, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளிக்கும் தகவல்களை புறக்கணிக்க வேண்டாம். கொடுக்கப்படும் தகவல்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளும்படியும், தகவலின் பின்னணியை பார்க்கும்படியும் மந்திரிகள் மற்றும் அனைத்து துறை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.