கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி
ஊழல் தடுப்பு படையை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து லோக் அயுக்தாவை அமல்படுத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் லோக் அயுக்தா, உப லோக் அயுக்தாவை வலுப்படுத்தவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். தற்போது ஊழல் வழக்குகள் குறித்து லோக் அயுக்தா போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கனகராஜ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
அந்த மனு மீது நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் நேற்று மனு மீதான இறுதி விசாரணை நடந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி கனகராஜூன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.