நாடாளுமன்ற மக்களவை எம்.பி.யாக டிம்பிள் யாதவ் பதவியேற்பு

நாடாளுமன்ற மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த டிம்பிள் யாதவ் இன்று பதவியேற்று கொண்டார்.

Update: 2022-12-12 07:19 GMT



புதுடெல்லி,


உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவின் சமீபத்திய மறைவால் அவரது மெயின்புரி நாடாளுமன்ற மக்களவை தொகுதி காலியானது.

இதனால், அதற்கான இடைத்தேர்தல் நடத்த முடிவானது. இந்த தேர்தலில், உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி மற்றும் அக்கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிட்டார்.

தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், 2,40,322 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் ரகுராஜ் சிங் சாக்யாவை வீழ்த்தி டிம்பிள் வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிம்பிள் யாதவ் முறைப்படி இன்று அவையில் பதவியேற்று கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்