போர் விமானங்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் வரைபடங்கள் - விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்

எதிரிகளின் ராணுவ படைத்தளங்கள் குறித்த தகவல்களையும் டிஜிட்டல் வரைபடங்கள் மூலம் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-09 07:10 GMT

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு இந்திய விமானப்படையைச் சேர்ந்த அப்போதைய விங் கமாண்டர் கேப்டன் அபிநந்தன் வர்த்தமானின் 'மிக்-21' போர் விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தது. இதையடுத்து அவர் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு, பின்னர் 3 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

இவ்வாறு இந்திய விமானப்படையைச் சேர்ந்த வீரர்கள் வழி தவறி எதிரிகளின் எல்லைக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் வரைபடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர் டி.கே.சுனில் கூறுகையில், "இனி எந்த விமானியும் தவறுதலாக எல்லையை கடக்க மாட்டார். விமானிகளுக்காக இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் டிஜிட்டல் வரைபடங்களை தயாரித்துள்ளது.

இந்த டிஜிட்டல் வரைபடம் மூலம் விமானிகளுக்கு மலைப்பகுதிகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய முடியும். இதன் மூலம் விபத்துகள் தவிர்க்கப்படும். அதேபோல், எதிரிகளின் ராணுவ படைத்தளங்கள் குறித்த தகவல்களையும் இந்த டிஜிட்டல் வரைபடங்கள் மூலம் கண்டறிய முடியும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்