மக்களை பார்க்க வரவில்லை; விலங்குகளை பார்க்க வருகிறார்பிரதமர் மோடியை கிண்டல் செய்த குமாரசாமி

மக்களை பார்க்க வரவில்லை; விலங்குகளை பார்க்க வருகிறார் பிரதமர் மோடியை குமாரசாமி கிண்டல் செய்துள்ளார்.

Update: 2023-04-09 18:45 GMT

பெங்களூரு-

சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூர் வனப்பகுதி தொடங்கப்பட்டு 50 ஆண்டு ஆகியுள்ளது. இதன் 50-வது ஆண்டு பொன்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வந்துள்ளார். அவர் நேற்று பந்திப்பூர் வனப்பகுதிக்கு சென்று சபாரி மேற்கொண்டு வனவிலங்குகளை பார்த்து ரசித்தார். மேலும் பந்திப்பூர் வனப்பகுதி தொடங்கப்பட்ட 50-வது ஆண்டு பொன் விழாவிலும் அவர் கலந்து கொண்டார். இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி, பிரதமர் மோடி வருகையை கிண்டல் செய்துள்ளார். இதுபற்றி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கோர்ட், சூட், கூலிங் மூக்கு கண்ணாடி ஆகியவற்றை அணிந்து கொண்டு வந்தால் என்ன பிரயோஜனம், வனவிலங்களை பாதுகாக்க வேண்டும் என்பது நிஜம். ஆனால் நாட்டில் எவ்வளவு மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களில் யாரையாவது ஒருவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து அவர்களது கஷ்டங்களை கேட்டறிந்தாரா?. கர்நாடக மக்கள் மழை வெள்ளத்தால் கஷ்டப்படும்போது பிரதமர் மோடி வரவில்லை. கொரோனா காலத்திலும் அவர் மக்களை வந்து சந்திக்கவில்லை. இப்போது சபாரி மேற்கொண்டு வனவிலங்குகளை பார்வையிட வந்திருக்கிறார். கோர்ட், சூட், மூக்கு கூலிங் கண்ணாடி அணிந்து கொண்டு வந்தால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா?.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்