சூரியனை வழிபடும் சாத்பூஜை: வடமாநிலங்களில் கொண்டாட்டம்

டெல்லி, உத்தரகாண்ட்,மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சூரியனை வழிபடும் சாத்பூஜை கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றது.

Update: 2023-11-20 05:31 GMT

புதுடெல்லி,

தமிழர்கள் உழவர் திருநாளை பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கும் நிகழ்வுபோல வடமாநிலத்தவர்கள் சூரியன் அஸ்தமனம் மற்றும் சூரிய உதயத்தை வணங்கும் சாத்பூஜை நிகழ்வை கொண்டாடுவது வழக்கம்.

அந்தவகையில், டெல்லி, உத்தரகாண்ட்,மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சூரியனை வழிபடும் சாத்பூஜை கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றது. இன்று அதிகாலை முதலே பெண்கள் அங்குள்ள ஆறுகளில் இறங்கி சூரியன் உதிக்கும் திசையில் தீப ஆராதனை செய்து வழிபட்டார்கள்.

வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பூ, பழம், இனிப்புகள் மற்றும் கையில் கட்டக்கூடிய நோன்பு கயிறு உள்ளிட்டவைகளை கூடையில் வைத்து கொண்டு வந்து தண்ணீரில் இறங்கி தீப ஆராதனைகளை செய்து, தங்களது குடும்பம் நன்மை வேண்டியும், வியாபாரம் செழிக்கவும் சூரியனை வணங்கி ஆரத்தி எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பீகார் முதல்- மந்திரி நிதிஷ்குமார் பாட்னாவில் சாத்பூஜை நிகழ்வில் கலந்து கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்