தேர்தல் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: பாஜக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-04-17 15:56 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சேர்மன் பதவிக்கு போட்டியிட பாஜக நிர்வாகி தீபக் சைனி (வயது 26) கட்சியிடம் விருப்பம் தெரிவித்தார். ஆனால், தேர்தலில் போட்டியிட தீபக் சைனிக்கு கட்சி தலைமை வாய்ப்பு வழங்கவில்லை.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் மன உளைச்சல் அடைந்த தீபக் சைனி நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்