விளைபொருட்களுக்கு நிர்ணய விலை வழங்க கோரி; சாம்ராஜ்நகரில் விவசாயிகள் போராட்டம்
விளைபொருட்களுக்கு நிர்ணய விலை வழங்க கோரி சாம்ராஜ்நகரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்ளேகால்;
விவசாய விளைபொருட்களுக்கு நிர்ணய விலை வழங்க வலியுறுத்தி நேற்று சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் நிர்ணய விலையில் அதிகாரிகள் விளைபொருட்களை கொள்முதல் செய்வது இல்லை. இதனால் விவசாயிகள் கடும் துயரத்தில் உள்ளனர்.
இதுபற்றி புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. மேலும் மழையால் பயிர்கள் நாசமாகின. இதற்கு நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. உடனடியாக எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து அவர்கள் கலெக்டரை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.