டெல்லியில் 'கொரோனா அதிகரித்தாலும் பதற்றம் வேண்டாம்' - கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா அதிகரித்தாலும் பதற்றம் வேண்டாம் என்று அம்மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.;

Update:2022-08-10 00:28 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. அங்கு கடந்த 7-ந் தேதி தினசரி பாதிப்பு விகிதம் 17.85 சதவீதமாக அதிகரித்தது. கடந்த ஜனவரி 21-க்கு பின்னர் இது அதிகபட்ச அளவு ஆகும்.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், "கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் பெரும்பாலானோருக்கு லேசான தொற்று பாதிப்புதான். பதற்றம் அடைய வேண்டாம்" என குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்