2025க்குள் 2,000க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை இயக்க டெல்லி அரசு திட்டம்

டெல்லி அரசு 2025க்குள் 2,000க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

Update: 2023-06-20 17:08 GMT

புதுடெல்லி,

டெல்லி அரசு 2026 டிசம்பருக்குள் 2026 மின்சார பஸ்களை தனது சேவையில் சேர்க்க திட்டமிட்டு வருகிறது. இதில் முதல் 100 மின்சார பேருந்துகள் செப்டம்பர் மாதத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார பேருந்துகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ளதுடன், சிறந்த செயல்திறன், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்கிறது.

பயணிகளின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் போன்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் பேருந்துகள் வருகின்றன. டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், 2025ஆம் ஆண்டுக்குள் டெல்லியின் சாலைகளில் 10,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அவற்றில் 80 சதவீத பேருந்துகள் மின்சாரத்தில் இயங்கும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்