டெல்லியில் புதிதாக 1,323 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-16 16:57 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், மீண்டும் ஒரு சில நகரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இன்று புதிதாக 1,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 19,17,228 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் இருவர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,225 ஆக உள்ளது. அதே சமயம் டெல்லியில் இன்று 1,016 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 18,87,055 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் தற்போது 3,948 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்