டெல்லியில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 214 பேருக்கு தொற்று

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 214 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-29 18:25 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 5,683 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 98 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 556 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,70,137 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 259 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிழந்தனர். இதன்மூலம் டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 462 ஆக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்