சுகேஷிடம் ரூ.12 கோடி லஞ்சம் பெற்ற 81 சிறை அதிகாரிகள்; வெளிவந்த பட்டியல்; திகார் சிறையில் பரபரப்பு!

சுகேஷ் சந்திரசேகரிடம் சிறையில் போலீசார் லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-07-12 10:48 GMT

புதுடெல்லி

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு இருந்து தன்னை வேறு சிறைசால்லைக்கு மாற்ற வேண்டும் என கோஒர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளார்.

இந்த நிலையில் சிறையில் உள்ள 80க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் சுகேஷ் சந்திரசேகரிடம் லஞ்சம் வாங்கியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிறை அதிகாரிகள் அவரிடம் லஞ்சம் வாங்கி கொண்டு சந்திரசேகருக்கு மொபைல் போன்கள், ஒரு தனி அறை மற்றும் பிற சொகுசு வசதிகளை வழங்கி உள்ளனர். மொத்தம் 81 அதிகாரிகள் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கி உள்ளனர்.

இது சுகேஷ் சந்திரசேகருக்கு சிறைக்குள் இருந்து கொண்டு அவரது சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள அவரது கூட்டாளிகளை தொடர்பு கொள்ள உதவியது. திகார் சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்றதையடுத்து போலீசார் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே 8 சிறை ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கு முன், சந்திரசேகர் தனது கூட்டாளிகளை தொடர்பு கொள்ள சிறை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ ஊழியர்களின் உதவியை பெற்றதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சிறை அதிகாரிகளுக்கு, மாதந்தோறும், ரூ.1.5 கோடி ரூபாய் லஞ்சமாக, கொடுத்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்