பொருட்களை தனது கடையில் வாங்காததால் ஆத்திரம்; வாடிக்கையாளரை அடித்துக்கொன்ற மளிகை கடைக்காரர்

பொருட்களை தனது கடையில் வாங்காததால் ஆத்திரமடைந்த மளிகை கடைக்காரர் வாடிக்கையாளரை அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-07-02 03:09 GMT

டெல்லி,

தலைநகர் டெல்லியின் சங்கூர்பூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இதனிடையே, லோகேஷின் மளிகை கடையில் விக்ரம் குமார் (வயது 30) என்பவர் தனது வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வந்தார். ஆனால், கடைக்காரர் லோகேசுக்கும் வாடிக்கையாளர் விக்ரம் குமாருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், லோகேசின் கடையில் மளிகை பொருட்களை வாங்குவதை விக்ரம் நிறுத்தியுள்ளார். மேலும், வேறு கடையில் பொருட்களை வாங்கியுள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் விக்ரமை மளிகை கடைக்காரர் லோகேஷ் இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், கத்தரிக்கோலால் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த விக்ரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து தகவலறிந்த போலீசார் விக்ரமின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மளிகை கடைக்காரர் லோகேஷ் மற்றும் அவரது மகன்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது கடையில் பொருட்களை வாங்காததால் வாடிக்கையாளரை மளிகை கடைக்காரர் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்