அவதூறு வழக்கில் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரேவுக்கு டெல்லி ஐகோர்ட்டு சம்மன்
அவதூறு வழக்கில் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேக்கு டெல்லி ஐகோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.;
அவதூறு வழக்கு
சிவசேனாவில் பிளவை தொடர்ந்து அந்த கட்சியின் பெயர், சின்னத்தை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது. இந்த நிலையில் சிவசேனா கட்சி சின்னத்தை ரூ.2 ஆயிரம் கோடி கொடுத்து ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் பெற்றதாக சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே ஆகியோர் பேசியதாக தெரிவித்து ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த எம்.பி. ராகுல் ரமேஷ் சேவ்லே டெல்லி ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
சம்மன்
அந்த வழக்கை நீதிபதி பிரதீக் ஜலான் விசாரித்தார். ராகுல் ரமேஷ் சேவ்லே தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்ற டெல்லி ஐகோர்ட்டு, அவதூறு வழக்கில் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரேவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும் பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.