பிரதமர் மோடியுடன் டெல்லி முதல்-மந்திரி அதிஷி சந்திப்பு
மோடி-அதிஷி சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.;
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமீனில் வெளியே வந்தபின் பதவி விலகினார். அதன்பின்னர், ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், முதல்-மந்திரி அதிஷி, பதவியேற்ற பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நமது தலைநகரின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே முழு ஒத்துழைப்பு இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதிஷி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை பிரதமர் அலுவலகம், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஆனால் சந்திப்பு தொடர்பான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஆட்சி நிர்வாகம், அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் டெல்லி ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.