நமது நாட்டின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு வரலாற்றுத் தருணம் - மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர் மோடி

மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நமது நாட்டின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு வரலாற்றுத் தருணம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-21 19:10 GMT

Image Courtacy: PTI

புதுடெல்லி,

மாநிலங்களவையில் நேற்று மகளிர் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதா குறித்து மாநிலங்களவையில் 11 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இந்த சூழலில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் ஒருமனதாக நிறைவேறியது. மாநிலங்களவையில் இருந்த அனைத்து எம்.பி.க்களும் (215) மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். மசோதா நிறைவேற்ற நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதநிலையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நமது நாட்டின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு வரலாற்றுத் தருணம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், " நமது தேசத்தின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு முக்கியமான தருணம்..! 140 கோடி இந்தியர்களுக்கு வாழ்த்துகள்.

நாரி சக்தி வந்தான் ஆதினியத்துக்கு வாக்களித்த அனைத்து மாநிலங்களவை எம்.பி.க்களுக்கும் நன்றி. இத்தகைய ஒருமித்த ஆதரவு உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது.

நாடாளுமன்றத்தில் நாரி சக்தி வந்தான் ஆதினியம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இந்தியப் பெண்களுக்கு வலுவான பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரமளிக்கும் சகாப்தத்தை நாங்கள் தொடங்குகிறோம். இது வெறும் சட்டம் அல்ல; நம் தேசத்தை உருவாக்கிய எண்ணற்ற பெண்களுக்கு இது ஒரு அஞ்சலி. அவர்களின் பின்னடைவு மற்றும் பங்களிப்புகளால் இந்தியா வளப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று நாம் கொண்டாடும் போது, நம் தேசத்தின் அனைத்து பெண்களின் வலிமை, தைரியம் மற்றும் அசைக்க முடியாத மனப்பான்மை ஆகியவற்றை நினைவுபடுத்துகிறோம். அவர்களின் குரல்கள் இன்னும் திறம்படக் கேட்கப்படுவதை உறுதி செய்வதற்கான இந்த வரலாற்று நடவடிக்கை" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்