திருமண வீட்டில் சிலிண்டர் வெடித்து பெரும் விபத்து - 12 பேர் பலி

திருமண வீட்டில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2022-12-11 07:54 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் பஹிங்ரா கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது, திருமண வீட்டில் உணவு தயார் செய்துகொண்டிருந்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. கியாஸ் கசிவு காரணமாக ஒரு சிலிண்டர் வெடிக்க அடுத்தடுத்து அருகில் இருந்த சிலிண்டர்களும் வெடித்தது.

இந்த கோர விபத்தில் திருமண வீட்டில் தீப்பற்றியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், சிலிண்டர் விபத்தில் படுகாயமடைந்தவர்களில் கடந்த 2 நாட்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக திருமண வீட்டில் நடந்த சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களில் 42 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்