"தலைநகரில் மகளிர் ஆணைய தலைவிக்கே பாதுகாப்பு இல்லை" குடிபோதையில் தவறாக நடந்து கொண்ட கார் டிரைவர்

டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் 10-15 மீட்டர் வரை காரில் இழுத்துச் செல்லப்பட்டார். குடிபோதையில் டிரைவர் அவளிடம் தவறாக நடந்து கொண்டார்.

Update: 2023-01-19 09:50 GMT

புதுடெல்லி

டெல்லி பெண்கள் ஆணைய (டிசிடபிள்யூ) தலைவர் ஸ்வாதி மாலிவால். இவர் இன்று அதிகாலை 3.11 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். அப்போது குடிபோதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர் அவரை தனது காரில் ஏறுமாறு கூறி உள்ளார். பின்னர் அவரிடம் தவறாக நடந்து கொண்டு காரின் கண்ணாடியை மூடிவிட்டு 10 முதல் 15 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்று உள்லார்.

இதுகுறித்து ஸ்வாதி மாலிவால் தனது சமூகவலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

"நான் இரவில் பெண்கள் பாதுகாப்பை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, குடிபோதையில் ஒரு நபர் என்னை துன்புறுத்தினார். அவரது அநாகரீகமான செயலை நான் எதிர்த்தபோது, அவர் தனது காரின் கண்ணாடியை மூடிவிட்டு சிறிது தூரம் என்னை இழுத்துச் சென்றார், "கடவுள் நேற்றிரவு என் உயிரைக் காப்பாற்றினார்," என்று அவர் கூறி உள்ளார்.

மேலும் தேசிய தலைநகரின் மோசமான சட்டம் மற்றும் ஒழுங்கை குறை கூறிய ஆவ்ர் டெல்லிமகளிர் ஆனைய தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், மற்ற பெண்களின் பாதுகாப்பு பற்றி என்ன நினைப்பது" என்று கூறி உள்ளார்.

இந்தச் சம்பவத்தை உறுதி செய்த டெல்லி போலீசார். ஹரிஷ் சந்திரா என்ற கார் டிரைவரை கைது செய்து உள்ளதாக கூறி உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்