மத்திய பிரதேசத்தில் மகள் பாலியல் துன்புறுத்தல்... குற்றவாளி விடுதலை; தந்தையும் தற்கொலை செய்த சோகம்

மத்திய பிரதேசத்தில் மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் சிறையில் இருந்து விடுதலையான சம்பவத்தில் தந்தையும் தற்கொலை செய்து உள்ளார்.

Update: 2023-07-10 06:07 GMT

போபால்,

மத்திய பிரதேசத்தில் விதிஷா நகரில் வசித்து வந்த இளம்பெண் 6 பேருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறினார். இதன்பின் அவர் கடந்த மே 25-ந்தேதி அந்த இளம்பெண் தற்கொலை செய்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, நதேரன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சுதீப் தகத் என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இளம்பெண்ணின் தந்தை கடந்த வியாழ கிழமை தற்கொலை செய்து உள்ளார். இதனால், அவரை தற்கொலைக்கு தூண்டினர் என 6 பேருக்கு எதிராக வழக்கு ஒன்று விதிஷா கொத்வாலி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா கடந்த சனிக்கிழமை விசாரணைக்கு உத்தரவிட்டார். அவர் கூறும்போது, இளம்பெண் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்ததும் வழக்கு ஒன்று பதிவானது.

அந்த இளம்பெண் தற்கொலை செய்ததும், தற்கொலைக்கு தூண்டிய வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளி சுதீப் தகத் கைது செய்யப்பட்டார் என கூறியுள்ளார்.

சிறையில் இருந்து சுதீப் தகத் விடுதலையான நிலையில், இளம்பெண்ணின் தந்தை தற்கொலை செய்து உள்ளார் என மந்திரி மிஷ்ரா கூறியுள்ளார். இதனையடுத்து, 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நத்தேரன் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி மற்றும் தலைமை காலவர், கள பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்