இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற பிரியங்கா காந்தி மகள் மிராயா வத்ரா!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற பிரியங்கா காந்தி மகள் மிராயா வத்ராவும் பங்கேற்றார்.

Update: 2022-12-12 10:24 GMT

ஜாலவார்,

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார்.

இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா உள்பட 7 மாநிலங்களை கடந்து, கடந்த 5-ந் தேதி ராஜஸ்தான் மாநிலத்துக்குள் நுழைந்தது. காங்கிரஸ் ஆளும் ஒரே மாநிலமான ராஜஸ்தானில் 17 நாட்களில் 500 கி.மீ யாத்திரையை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த ராகுல்காந்தி நேற்று ராஜஸ்தானின் ஜாலவார் மாவட்டம் பல்தேவ்புரா நகரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மீண்டும் தொடங்கினார்.

இந்தநிலையில், ராஜஸ்தானில் 18-வது நாளாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பிரியங்கா காந்தி மகள் மிராயா வத்ரா பங்கேற்றார். அப்போது பாரம்பரிய நாட்டுப்புற நடனம் ஆடிய கலைஞர்களுடன் பிரியங்கா காந்தி வத்ரா, அவரது கணவர் ராபர்ட் வத்ரா, மகள் மிராயா வத்ரா கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்