"தேர்தல் தோல்வி பயத்தால் சிலிண்டர் விலை குறைப்பு" - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

வருங்காலங்களில் மேலும் பல பரிசுகளை பிரதமர் மோடி அறிவிப்பார் என்று ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

Update: 2023-08-29 15:10 GMT

புதுடெல்லி,

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

"தேர்தல் தோல்வி பயத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பிரதமர் மோடி குறைத்துள்ளார். கர்நாடகாவில் பாஜக தோல்வி அடைய சிலிண்டர் விலையேற்றமே முக்கிய காரணம். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டரை வழங்கி வருகிறது. பாஜக நிர்வாக சீர்கேட்டால் துன்பப்பட்ட மக்கள் ராஜஸ்தான் அரசின் திட்டத்தால் நிம்மதி அடைந்துள்ளனர்.

3 மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களிலும் தோல்வியை எதிர்நோக்கியுள்ளது பாஜக. 5 மாநில தேர்தல், மக்களவை தேர்தலில் தோல்வி அடைவோம் என்று பிரதமருக்கு பயம் வந்து விட்டது. வருங்காலங்களில் மேலும் பல பரிசுகளை பிரதமர் மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்