'இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் அடித்தளமிட்டுள்ளது' - முகேஷ் அம்பானி

உத்தரபிரதேசத்தின் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமத்திலும் ஜியோ 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

Update: 2023-02-10 16:08 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் பேசிய முகேஷ் அம்பானி, இந்தியா மிகவும் வளமான பாதையில் உள்ளதாகவும், இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் அடித்தளமிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தின் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமத்திலும் ஜியோ 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் உத்தரபிரதேசத்தில் சில்லறை வணிகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வணிகங்கள் மூலம் 4 ஆண்டுகளில் கூடுதலாக 75 ஆயிரம் கோடி முதலீடு ஈட்டுவதற்கு ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் கூடுதலாக ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்