மணிப்பூர்: இம்பால் மேற்கு மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு

காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-02 00:39 GMT

Image Courtesy : ANI 

இம்பால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால் சிறுபான்மையினராக உள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்த குகி, நாகா சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையில் கடந்த மே மாதம் 3-ந்தேதி ஏற்பட மோதல் இன்னும் ஓயாமல் நீண்டு வருகிறது. இதனால் மணிப்பூர் கலவர பூமியாக மாறியிருக்கிறது. கலவரங்களில் இதுவரை சுமார் 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க, மணிப்பூரில் ஜூலை 5-ந்தேதி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்ட்டுள்ளது. மேலும் அங்கு பள்ளிகள் திறப்பு ஜூலை 8-ந்தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மணிப்பூர் மேற்கு மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை சற்று மேம்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து அங்குள்ள மக்கள் உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பெறுவதற்காக இன்று காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்