நள்ளிரவில் பெட்ரோல் நிரப்ப குவிந்த மக்கள்

நள்ளிரவில் பெட்ரோல் நிரப்ப மக்கள் குவிந்தனர்

Update: 2022-05-31 17:03 GMT

பெங்களூரு:மத்திய அரசு பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் விற்பனை மைய உரிமையாளர்கள் நேற்று ஒரு நாள் கொள்முதலை நிறுத்தி போராட்டம் நடத்தினர். ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிவமொக்கா, தார்வார் மாவட்டடம் நவலகுந்து உள்பட மாநிலம் முழுவதும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி காட்டுத்தீ போல பரவியது.


இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகன டிரைவர்கள் நள்ளிரவில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் குவிந்தனர். அவர்கள் போட்டிப்போட்டு கொண்டு வாகனங்களில் பெட்ரோல், டீசலை நிரப்பி சென்றதை காணமுடிந்தது. சில பெட்ரோல் விற்பனை மையங்களில், தட்டுப்பாடு இல்லை என கூறியும் கேட்காமல், வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசலை நிரப்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்