நாட்டு மக்கள் அதிகம் பயன்பெறும் வகையிலான நீதிமன்ற உட்கட்டமைப்பு தேவை: மத்திய சட்ட மந்திரி

நாட்டில் மக்களுக்கு இன்னும் அதிகம் பயன்படும் வகையிலான நீதிமன்ற உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ இன்று பேசியுள்ளார்.

Update: 2022-12-06 16:26 GMT


புதுடெல்லி,


டெல்லி ஐகோர்ட்டின் எஸ் பிளாக் தொடக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, மின்னணு வழியேயான நீதிமன்ற நடைமுறைகள் தொடர்புடைய திட்ட பணிகள் பற்றி, விரிவான கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டேன்.

வருங்காலத்தில், இந்திய நீதிமுறையானது காகித பயன்பாடற்ற ஒன்றாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். அவர் தொடர்ந்து பேசும்போது, மத்திய அரசால் ஆதரவளிக்கப்படும் திட்டங்களில் இருந்து, நீதிமன்ற உட்கட்டமைப்பு நடைமுறைகளில் உருமாற்றங்களை நாம் கண்டு வருகிறோம்.

நாட்டின் பல கோர்ட்டுகளுக்கு சென்று நான் பார்வையிட்டு உள்ளேன். சில கோர்ட்டுகள் பாராட்டத்தக்க வகையிலும், ஒரு சில கோர்ட்டுகள் வருந்தத்தக்க வகையிலும் உள்ளன.

நாட்டில், மக்களுக்கு இன்னும் கூடுதலாக, அதிகம் பயன்படும் வகையிலான நீதிமன்ற உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது என மந்திரி கிரண் ரிஜிஜூ பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்