பா.ஜனதாவின் ஊழலை யாராலும் மூடி மறைக்க முடியாதுடி.கே.சிவக்குமார் கடும் தாக்கு

பா.ஜனதாவின் ஊழலை யாராலும் மூடி மறைக்க முடியாது என டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2023-04-24 18:45 GMT

மங்களூரு-

பா.ஜனதாவின் ஊழலை யாராலும் மூடி மறைக்க முடியாது என டி.கே.சிவக்குமார் கூறினார்.

சட்டசபை தேர்தல்

கர்நாடகவில் சட்டசபை தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளன. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் உள்ள கொல்லூர் முகாம்பிகை கோவிலுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கபட்டது. இதையடுத்து டி.கே.சிவக்குமார் மூகாம்பிகையை தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பைந்தூரில் நடந்த பிரசார கூட்டத்தில் மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். பா.ஜ.க.வில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும். மக்களுக்கு சேவை செய்யவே காங்கிரஸ் கட்சியினர் பாடுபட்டு வருகிறார்கள். உடுப்பியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்வார். கடலோர பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு குறைந்தது 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

இந்துத்துவா விவகாரம்

இந்துத்துவா விவகாரத்தில் பா.ஜ.க. மக்களை ஏமாற்றி வருகிறது. இந்த தேர்தல் உணர்வுக்கும், வாழ்க்கைக்கும் இடையே நடக்கிறது. ஊழலை ஒழிப்பதில் உறுதியாக உள்ளோம். காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் அதிருப்தியாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். சிலர் கட்சி சார்பற்றவர்களாக போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவர்கள் ஆரம்பம் முதலே அதையே செய்து வருகின்றனர். லிங்காயத் சமூகம் தொடர்பான சித்தராமையாவின் சர்ச்சை குறித்து சித்தராமையா தனது காலத்தில் ஊழல் நடந்ததாக கூறியிருக்கிறார். ஆனால் ஒட்டுமொத்த சமூகமும் இல்லை. பா.ஜ.க. தலைவர்கள் எத்னால், விஸ்வநாத், கூலிஹட்டி சேகர், கெம்பண்ணா ஆகியோர் மாநிலத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறியுள்ளனர். பா.ஜனதா அரசின் ஊழலை யாராலும் மூடி மறைக்க முடியாது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்

மாநிலத்தில் 40 சதவீத கமிஷன உள்பட பல்வேறு அரசு பணிகளுக்கு ஆள்சேர்ப்பு செய்ததில் ஊழல் நடந்தது பா.ஜ.க. ஆட்சியில் தான்.பா.ஜ.க.வின் அணை உடைந்துவிட்டது. லிங்காயத் சமூகத்தினர் மட்டுமின்றி அனைத்து சமுதாய தலைவர்களும் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைகின்றனர். வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். வெளியூர்களில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு வந்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்