கர்நாடகத்தில் புதிதாக 845 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நேற்று 19 ஆயிரத்து 28 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 845 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 589 பேருக்கும், பல்லாரியில் 14 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 17 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 13 பேருக்கும், குடகில் 19 பேருக்கும், மைசூருவில் 44 பேருக்கும், சிவமொக்காவில் 34 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாரி, மைசூரு, ராமநகர், சிவமொக்கா, உடுப்பியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒரே நாளில் 1,389 பேர் குணம் அடைந்தனர். 6 ஆயிரத்து 775 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 4.44 ஆக உள்ளது.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.