புதிதாக 58 பேருக்கு கொரோனா
புதிதாக 58 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று புதிதாக 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 37 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று புதிதாக உயிரிழப்பு இல்லை. இதுவரை 40 லட்சத்து 70 ஆயிரத்து 762 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரத்து 260 பேர் உயிரிழந்து உள்ளனர்.
139 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 40 லட்சத்து 28 ஆயிரத்து 916 பேர் குணம் அடைந்து உள்ளனர். 1,544 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.