கர்நாடகத்தில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் நேற்று 18 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 596 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

Update: 2022-06-14 20:59 GMT

பெங்களூரு

கர்நாடகத்தில் நேற்று புதிதாக 596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பெங்களூருவில் 582 பேர்

கர்நாடகத்தில் நேற்று 18 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 596 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 582 பேர் பாதிக்கப்பட்டனர்.

தட்சிண கன்னடாவில் 4 பேர், பல்லாரியில் 2 பேர், பெலகாவி, பெங்களூரு புறநகர், கொப்பல், சிவமொக்கா, உடுப்பி, உத்தர கன்னடாவில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டனர். 21 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை.

3.14 சதவீதம்

இதுவரை 6 கோடியே 66 லட்சத்து 39 ஆயிரத்து 421 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 39 லட்சத்து 57 ஆயிரத்து 343 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்றும் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை. இதுவரை 40 ஆயிரத்து 66 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 400 பேர் நேற்று குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 39 லட்சத்து 13 ஆயிரத்து 353 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 3 ஆயிரத்து 882 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு 3.14 சதவீதமாக உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருவது சுகாதாரத்துறையினரை அதிர்ச்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்