கர்நாடகாவை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் - ராகுல்காந்தி

வரும் சட்டசபை தேர்தலில் மத்தியப்பிரப்தேசத்திலும் 150 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Update: 2023-05-29 10:03 GMT

போபால்,

மத்திய பிரதேச சட்டசபையில் மொத்தம் 230 இடங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 116 எம்.எல்.ஏக்கள். மத்திய பிரதேச சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.

ம.பி. தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114; பாஜக 109 இடங்களைப் பெற்றன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 121 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியை அமைத்து. காங்கிரஸின் மூத்த தலைவர் கமல்நாத் மாநில முதல்-மந்திரி ஆனார். அதனை தொடர்ந்து மாநிலத்தில் நடைப்பெற்ற அரசியல் மாற்றத்தால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது.

பின்னர் பாஜக ஆட்சி அமைத்தது. சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரி ஆனார். இந்நிலையில் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொள்ள தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு ம.பி. தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த சூழ்நிலையில், மத்தியப்பிரதேச தேர்தல் குறித்து காங். தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் ஆலோசனை நடத்திய பின் ராகுல்காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

"மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது பற்றி ஒரு விரிவான ஆலோசனை நடத்தினோம். கர்நாடகாவில் 136 இடங்களில் வெற்றி பெற்றது போலவே மத்தியப்பிரப்தேசத்திலும் 150 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்