பா.ஜனதாவின் சுனாமியில் காங்கிரஸ் அடித்து செல்லப்படும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

பா.ஜனதாவின் சுனாமியில் காங்கிரஸ் அடித்து செல்லப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-20 22:13 GMT

பெங்களூரு: கர்நாடக பா.ஜனதா கட்சியின் பழங்குடியினர் அணி மாநாடு பல்லாரியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

சித்தராமையாவின் அஹிந்தா (பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடியினரை உள்ளடக்கியது) எங்கே உள்ளது?. அந்த சமூகங்களில் நிலவும் வறுமையை ஒழிக்க அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது நடவடிக்கை எடுக்கவில்லை. தலித், பழங்குடியினர் மக்கள் இன்று உண்மை நிலையை புரிந்து கொண்டுள்ளனர். அந்த மக்களின் நலன்களை காக்க பா.ஜனதா தயாராக உள்ளது. சோனியா காந்தி பல்லாரியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த நேரத்தில் பல்லாரியின் வளா்ச்சிக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவதாக உறுதியளித்தார். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. இதன் மூலம் அவர் பல்லாரி மக்களை ஏமாற்றினார்.இது தான் காங்கிரஸ் கட்சியின் கொள்கை. இந்த முறை தேர்தலின்போது காங்கிரசுக்கு பல்லாரி மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் சுனாமியில் காங்கிரஸ் அடித்து செல்லப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்