கர்நாடகாவில் 33-வது நாளாக ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்கினார்...!

கர்நாடகாவில் நடந்த ராகுல் காந்தியின் 33-வது நாள் பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-10-10 03:11 GMT

பெங்களூரு,

தேச ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி பாதயாத்திரையை தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாதயாத்திரை கேரளாவில் 19 நாட்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அதே மாதம் 30-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை சாம்ராஜ்பேட்டை மாவட்டம் குண்டலுப்பேட்டை வழியாக கர்நாடகத்திற்கு வந்தது.

அங்கு ராகுல் காந்திக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நஞ்சன்கூடு, மைசூரு, மண்டியா வழியாக பாதயாத்திரை துமகூரு மாவட்டத்திற்கு வந்தது.

இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று தனது 32-வது நாள் பாதயாத்திரையை மேற்கொண்டார். இது கர்நாடகத்தில் 8-வது நாளாக நடக்கும் பாதயாத்திரை ஆகும். காலை 6.30 மணிக்கு துமகூரு மாவட்டத்தில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்கி 7 மணி வரை சிக்கநாயக்கனஹள்ளி ஹுலியூர் பொச்கட்டே பகுதிக்கு வந்தடைந்தார். அத்துடன் நேற்றைய பாதயாத்திரை நிறைவடைந்தது. சுமார் 30 கி.மீ. தூரம் பாதயாத்திரை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு ஹுலியூரில் ராகுல் காந்தி தங்கினார்.

இந்தநிலையில் பாதயாத்திரையின் 33-வது நாளில் தும்கூர் மாவட்டத்தில் உள்ள போச்சட்டேயில் இருந்து 'பாரத் ஜோடோ யாத்திரை'யை மீண்டும் தொடங்கினார். காலை 6.30 மணிக்கு ராகுல் காந்தியின் பாதயாத்திரை அங்கிருந்து தொடங்கியது. பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்