காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது லோக் அயுக்தா நடவடிக்கை எடுக்க வேண்டும்
வருமானத்து அதிகமாக சொத்து குவித்த வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது லோக் ஆயுக்தா போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூருவில் நேற்று பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. ஜீவராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சிருங்கேரி ெதாகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேகவுடா, சட்டவிரோதமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளார். அவர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, தனக்கு ரூ.35 லட்சம் தான் சொத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார். ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு பாலேஒன்னூரில் ரூ.145 கோடி மதிப்பிலான 200 ஏக்கர் நிலத்தை அவர் வாங்கி உள்ளார். இதற்கு எங்கிருந்து பணம் வந்தது.
இதுதொடர்பாக கொப்பாவை சேர்ந்த விஜயானந்தா என்பவர் லோக் அயுக்தாவில் புகார் அளத்துள்ளார். ஆனால் ராஜேகவுடா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக லோக் அயுக்தா வழக்குப்பதிவு செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் நிலம் வாங்கியதற்கான ஆவணங்களையும் லோக் அயுக்தாவில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.