நாடாளுமன்றத் தேர்தல் 2024: கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் குழுவை அமைத்தது காங்கிரஸ்

பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான அனைத்து அம்சங்களையும் 5 பேர் குழு ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-12-20 01:41 IST

Image Courtacy: PTI

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுள்ளன. முதல் நடவடிக்கையாக எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. இக்கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் இதுவரை 3 சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், புதுடெல்லியில் நேற்று 4-வது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. குழுவின் ஒருங்கிணைப்பாளராக கட்சியின் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கார் முன்னாள் முதல்-மந்திரிகள் பூபேஷ் பாகேல், முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித், மூத்த தலைவர் மோகன் பிரகாஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான அனைத்து அம்சங்களையும் இந்தக் குழு ஆராயும் என்று காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்