பயங்கரவாத அமைப்புகளுடன் காங்கிரஸ் ஒப்பந்தம்; நளின்குமாா் கட்டீல் எம்.பி. குற்றச்சாட்டு

பயங்கரவாத அைமப்புகளுடன் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துள்ளதாக நளின்குமார் கட்டீல் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2022-12-16 18:45 GMT

மங்களூரு:

நளின்குமார் கட்டீல் எம்.பி.

கர்நாடக பா.ஜனதா தலைவரும், தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல் நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நாட்டில் பயங்கரவாத செயல்கள் தொடங்கியது. இந்திரா காந்தி பயங்கரவாதத்தை தூண்டினார். காஷ்மீரில் தொடங்கி நாடு முழுவதும் பயங்கரவாதம் பரவ காங்கிரஸ் தான் காரணம். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த காலத்தில், டெல்லியிலும், கோவையிலும் குண்டுவெடிப்பு நடந்தது. மும்பையிலும் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட கசாப்புக்கு காங்கிரஸ் விருந்தோம்பல் அளித்தது. மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை பயங்கரவாதம் அல்ல என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறார். இது அவரது மனநிலையை காட்டுகிறது.

திசை திருப்ப வேண்டிய...

பயங்கரவாதி ஷாரிக்கின் பின்னணி மற்றும் போலீசாரின் விசாரணை அடிப்படையில் இது பயங்கரவாத செயல் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். போலீஸ் துறை மீது காங்கிரசுக்கு மரியாதை இல்லை. வாக்காளர் தகவல்கள் திருட்டு வழக்கை திசை திருப்பவே, மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததாக சொல்கிறார்.

எந்த வழக்கையும் திசை திருப்பும் எண்ணம் பா.ஜனதாவுக்கு இல்லை. வாக்காளர் தகவல் திருட்டு, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு, ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக சரியான முறையில் விசாரணை நடந்து வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது. எந்த வழக்கையும் திசை திருப்ப வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

காங்கிரஸ் ஒப்பந்தம்

பயங்கரவாத அமைப்புகளுடன் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. நாட்டில் பயங்கரவாதத்ைத இயக்கும் சக்தியாக காங்கிரஸ் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்