இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார் ராகுல்காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரில் இருந்து அடுத்த நடைபயணத்தை தொடங்கினார்.

Update: 2024-01-14 10:23 GMT

இம்பால்,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்தநிலையில் ஒற்றுமை யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை மணிப்பூரில்  தொடங்கினார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபெறும் இந்த யாத்திரை மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. 

15 மாநிலங்களில் 6,713 கி.மீ. தூரம் நடைபெறும் இந்த யாத்திரை 67 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொள்கிறார்கள்.

முன்னதாக இந்த யாத்திரையை மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால் அங்கு அனுமதி வழங்குவதில் மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதைத்தொடர்ந்து தவுபல் மாவட்டத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது.

இதைப்போல அசாமில் 2 இடங்களில் இரவு ஓய்வெடுப்பதற்கும் மாநில அரசு அனுமதி மறுத்தது. இதனால் மாற்று இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்