டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல்: ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது;

Update:2024-04-21 04:24 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

டெல்லி மேயர் மற்றும் துணை மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவிக்கு மகேஷ் கிச்சி என்பவரையும், துணை மேயர் பதவிக்கு ரவீந்தர் பரத்வாஜு என்பவரையும் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் டெல்லி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேயர் தேர்தல் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டதாக டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அனில் பரத்வாஜ் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் டெல்லியில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்