அரியானாவில் வெடித்த திடீர் மோதலால் பரபரப்பு - 144 தடை உத்தரவு அமல்!

அரியானாவில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 40 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-07-31 17:28 GMT

கவுகாத்தி,

அரியானா மாநிலம் குர்கான் அருகே, நூக் என்ற இடத்தில் நுல்ஹர் மஹாதேவ் கோயில் உள்ளது. இங்கு இன்று நடந்த விழா முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் யாத்திரையில் 2,500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகே உள்ள நதியில் புனித நீர் எடுத்து வந்தனர்.

அப்போது குர்கான்- அல்வார் தேசிய நெடுஞ்சாலை வழியாக யாத்திரை வந்த போது ஒரு அமைப்பினர் தகராறு செய்தாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட கைகலப்பு கலவரமாக மாறியது, இதில் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கல்வீச்சு தக்குதல்கள் நடந்ததில் 40 பேர் படுகாயமடைந்தனர்.

இதனால், அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். படையினர் வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், இணைய சேவையும் தடை செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்